6-ஆம் வகுப்பு தமிழ்: முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் 2026

தமிழகப் பள்ளிகளில் நடைபெறும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026-ஆம் ஆண்டு முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid-Term Exam) தமிழ் வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையிலும், மொபைல் போனில் வினாத்தாளைப் பார்ப்பதற்கு வசதியாகவும் (Mobile View) தெளிவாக வடிவமைத்துள்ளோம்.

வகுப்பு 6-ஆம் வகுப்பு (6th Standard)
பாடம் தமிழ் (Tamil)
தேர்வு முதல் இடைப் பருவத் தேர்வு 2026
மொத்த மதிப்பெண்கள் 50 மதிப்பெண்கள்

முதல் இடைப் பருவத் தேர்வு - 2026

தமிழ்

வகுப்பு: 6 - STD நேரம்: 1:30 மணி மதிப்பெண்கள்: 50

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. 5 x 1 = 5

1. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _____ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி    ஆ) கோபம்    இ) வருத்தம்    ஈ) அசதி

2. 'மா' என்னும் சொல்லின் பொருள் _____
அ) மாடம்    ஆ) வானம்    இ) விலங்கு    ஈ) அம்மா

3. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _____
அ) துருவப்பகுதி    ஆ) இமயமலை    இ) இந்தியா    ஈ) தமிழ்நாடு

4. கணினி+தமிழ் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____
அ) கணினிதமிழ்    ஆ) கணினித்தமிழ்    இ) கணினிததமிழ்    ஈ) கனினிதமிழ்

5. முன்பென்றால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) முன்+பென்றால்    ஆ) முன்பு+அன்றால்    இ) முன்பு+என்றால்    ஈ) முன்பு+பென்றால்


கோடிட்ட இடங்களை நிரப்புக 4 x 1 = 4

6. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது _____
7. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை _____
8. பறவைகள் இடம்பெயர்வதற்கு _____ என்று பெயர்.
9. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல் _____


பொருத்துக 3 x 1 = 3

10. அறிவுக்கு    - வேல்
11. இளமைக்கு    - தோள்
12. புலவர்க்கு    - பால்

II. எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளி. 5 x 2 = 10

13. பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
14. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
15. முன்பெல்லாம் மழைக்காலம் எவ்வாறு இருக்கும்?
16. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
17. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
18. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
19. எழுத்துகளுக்கு தொடக்கமாக அமைவது எது?


III. எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளி. 2 x 4 = 8

20. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
21. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?
22. குருவிகள் எதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன?
23. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?


IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 5 x 2 = 10

24. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
நூல், மொழி, தமிழ், வெளி, மீன், விண் ______________

25. படிப்போம் : பயன்படுத்துவோம்
E-mail, Internet ______________

26. 'மை' என்னும் எழுத்தில் முடியும் நான்கு சொற்களை எழுதுக.
______________

27. சொற்றொடரில் அமைத்து எழுதுக.
தனிச்சிறப்பு - ______________ நாள்தோறும் - ______________

28. கீழ்காணும் சொற்களுக்குரிய மாத்திரை அளவை கண்டறிந்து எழுதுக.
கபிலர் ______ ஆய்த எழுத்து ______


V. அடிபிறழாமல் எழுதுக. 4 x 1 = 4

29. "தமிழுக்கும்" - எனத்தொடங்கு பாடலை அடிபிறழாமல் எழுதுக.


VI. கட்டுரை வடிவில் விடையளி. 6 x 1 = 6

30. விடுப்பு விண்ணப்பம் (அல்லது)
தமக்கு பெருமகிழ்வை அளித்ததாக கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?