5th Tamil Quarterly Exam Original Question paper 2026

5-ஆம் வகுப்பு தமிழ்: முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் மற்றும் விடைகள் 2025-2026

தமிழகப் பள்ளிகளில் நடைபெறும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2025-2026 ஆம் ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) தமிழ் வினாத்தாள் மற்றும் அதற்கான முழுமையான விடைகள் (Answer Key) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையிலும், மொபைல் போனில் பார்ப்பதற்கு வசதியாகவும் வடிவமைத்துள்ளோம்.

வகுப்பு 5-ஆம் வகுப்பு
பாடம் தமிழ்
தேர்வு தொகுத்தறி மதிப்பீடு - பருவம் I (2025-26)
மொத்த மதிப்பெண்கள் 60 மதிப்பெண்கள்

தொகுத்தறி மதிப்பீடு 2025-26

தமிழ் - பருவம் I

வகுப்பு: 5 நேரம்: 2 மணி மதிப்பெண்கள்: 60

1. புதிய சொற்களை உருவாக்கி எழுதுக. 5 x 1 = 5

அ) புதுக்கவிதை - கவிதை, விதை
ஆ) உருண்டைகள் - உண், உடை
இ) நீர்த்திவலை - நீர், வலை
ஈ) பழமொழிக்கிளி - மொழி, கிளி
உ) கன்றுக்குட்டி - கட்டி, குட்டி


2. தொடர்களில் உள்ள எழுவாய், பயனிலையை வகைப்படுத்துக. 5 x 1 = 5

அ) கண்மணி ஓவியம் வரைந்தாள்.
ஆ) திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
இ) அழகன் வாகனம் ஓட்டினான்.
ஈ) கொக்கு மீன்களைத் தின்றது.
உ) மாதவன் நடனம் ஆடினான்.

எழுவாய் பயனிலை
கண்மணி வரைந்தாள்
திருவள்ளுவர் இயற்றினார்
அழகன் ஓட்டினான்
கொக்கு தின்றது
மாதவன் ஆடினான்

3. சொற்களை முறைப்படுத்தித் தொடர் அமைத்து எழுதுக. 5 x 1 = 5

அ) கல்வி கற்றவருக்குச் / சென்ற / சிறப்பு / இடமெல்லாம்
விடை: கல்வி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ஆ) பூத்து / வண்ணப்பூக்கள் / இருந்தன / பூச்செடிகளில்
விடை: பூச்செடிகளில் வண்ணப் பூக்கள் பூத்து இருந்தன

இ) மரத்திலிருந்து / குரங்கு / பறித்துப்போட்டது / மாங்காயைப்
விடை: குரங்கு மரத்திலிருந்து மாங்காயைப் பறித்துப்போட்டது

ஈ) காகத்திடமிருந்து / நரி / பிரிக்க எண்ணியது / மானைப்
விடை: நரி காகத்திடமிருந்து மானைப் பிரிக்க எண்ணியது

உ) கல்வியும் பொருளும் / நம் வாழ்வு / உதவும் / வளம் பெற
விடை: கல்வியும் பொருளும் நம் வாழ்வு வளம் பெற உதவும்


4. உரிய சொற்களால் நிரப்புக. 5 x 1 = 5

அ) ஆந்தை அலறும் (அலறும் / அகவும்) சத்தம் கேட்டது.
ஆ) தாத்தா மாத்திரை விழுங்கினார் (விழுங்கினார் / சாப்பிட்டார்)
இ) சரியான திசையில் அம்பு எய்தான் (நெய்தான் / எய்தான்)
ஈ) தாய் அணிலுடன் அணிற் பிள்ளைகள் (குருளைகள் / பிள்ளைகள்) விளையாடின.
உ) எலி வளைக்குள் (வளைக்குள் / கூட்டிற்குள்) தானியங்களைச் சேகரித்து வைத்தது.


5. பிழைநீக்கி எழுதுக. 5 x 1 = 5

அ) கவிநிலா பாராட்டு மலையில் நனைந்தாள்.
விடை: கவிநிலா பாராட்டு மழையில் நனைந்தாள்.

ஆ) பறவைகள் இரக்கைகளை விரித்துப் பறந்தன.
விடை: பறவைகள் இறக்கைகளை விரித்துப் பறந்தன.

இ) தமிழரசி , கணினியில் கலந்துரையாடலைப் பார்த்தாள்.
விடை: தமிழரசி, கணினியில் கலந்துரையாடலைப் பார்த்தாள்.

ஈ) ஆலம் தெரியாமல் காலை விடாதே.
விடை: ஆழம் தெரியாமல் காலை விடாதே.

உ) நரி, மானை நெல் வயலுக்கு அழைத்துச் சென்றது.
விடை: நரி மானை நெல் வயலுக்கு அழைத்துச் சென்றது.


6. சொல்லுக்குரிய பொருளை (✓) செய்க. 5 x 1 = 5

i) கழை - அ) மரம் ஆ) கடல் இ) நெல் ஈ) கரும்பு
விடை: ஈ) கரும்பு

ii) அச்சம் - அ) அமைதி ஆ) பயம் இ) துணிவு ஈ) பணிவு
விடை: ஆ) பயம்

iii) மகரம் - அ) நட்சத்திரம் ஆ) மான் இ) குதிரை ஈ) மீன்
விடை: ஈ) மீன்

iv) சந்திரன் - அ) பரிதி ஆ) ஞாயிறு இ) நிலா ஈ) ஆதவன்
விடை: இ) நிலா

v) விரைவாக - அ) குறைவாக ஆ) வேகமாக இ) அதிகமாக ஈ) சிறிதாக
விடை: ஆ) வேகமாக


7. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 5 x 1 = 5

அ) புதுமை - அறிவியலில் தினந்தோறும் புதுமைகள் நிகழ்கின்றன.
ஆ) மழை - நேற்று மழை பெய்தது.
இ) உண்டியல் - நான் உண்டியலில் சேமித்து வைத்துள்ளேன்.
ஈ) வெற்றி - மாலா ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றாள்.
உ) நண்பர்கள் - எனக்கு ஐந்து நண்பர்கள் உள்ளனர்.


8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. 5 x 1 = 5

எல்லை அறியாப் பெருங்கடலே - நீதான்
இரவும் உறங்காயோ? கடலே
அல்லும்பகலும் அலைகடலே - உனக்கு
அலுப்பும் இலையோ கருங்கடலே

அ) 'அலுப்பு' என்ற சொல்லுக்கான பொருள் _________
அ) சிறப்பு ஆ) களைப்பு இ) பிறப்பு ஈ) பொறுப்பு
விடை: ஆ) களைப்பு

ஆ) ஒத்த ஓசையில் முடியும் இணையை (✓) செய்க.
அ) உறங்காயோ - அலைகடலே ஆ) இலையோ - நிறைதாமோ இ) பெருங்கடலே - அலைகடலே ஈ) உனதொலியோ - முழக்கமோ
விடை: இ) பெருங்கடலே - அலைகடலே

இ) பாடலில் உள்ள மையக்கருத்தாக வருவது எது?
அ) ஆறு ஆ) ஏரி இ) கடல் ஈ) குளம்
விடை: இ) கடல்

ஈ) பாடலில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
அ) இரவும் X பகலும் ஆ) உனக்கு X எனக்கு இ) சிறிய கடல் X பெரிய கடல் ஈ) உண்டு X இல்லை
விடை: அ) இரவும் X பகலும்

உ) பாடலில் உள்ள கடலுக்கு அலுப்பு இல்லை.


9. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1 x 5 = 5

கோடை மலர்க் கண்காட்சி
இடம்: கொடைக்கானல் நேரம்: காலை 8.00 - இரவு 8.00 நாள்: ஜூன் 1 முதல் 9 வரை
கண்காட்சியில் இடம்பெறுபவை
காய்கறிகள், பழங்கள், பூக்களால் ஆன மயில், கங்காரு, புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு. ஆயக்குடி கொய்யா, கொடைக்கானல் மலைப்பூண்டு, பல வகையான பூச்செடிகள், பூக்கள். பூக்களால் ஆன பல்வேறு தோற்ற அமைப்புகள்.
நடத்துவோர்: தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, கொடைக்கானல்
நுழைவுக்கட்டணம்:
பெரியவர்களுக்கு - ரூ 75
சிறியவர்களுக்கு - ரூ 25

1) மலர்க்கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறும்?
அ) ஆறு நாள்கள் ஆ) எட்டு நாள்கள் இ) ஒரு வாரம் ஈ) ஒன்பது நாள்கள்
விடை: ஈ) ஒன்பது நாள்கள்

2) ஐந்தாம்வகுப்பு படிக்கும் விவேதாவிற்கு நுழைவுக்கட்டணம் எவ்வளவு?
அ) ரூ.75/- ஆ) ரூ.50/- இ) ரூ.25/- ஈ) ரூ.100/-
விடை: இ) ரூ.25/-

3) மலர்க்கண்காட்சியை நடத்தும் துறை _________
அ) சுகாதாரத் துறை ஆ) சுற்றுலாத் துறை இ) மருத்துவத் துறை ஈ) தோட்டக்கலைத் துறை
விடை: ஈ) தோட்டக்கலைத் துறை

4) பார்வையாளர்களுக்கான நேரம் என்ன?
அ) காலை 8.00 - இரவு 8.00 ஆ) காலை 10.00 - இரவு 9.00 இ) காலை 9.00 - இரவு 8.00 ஈ) காலை 8.00 - இரவு 10.00
விடை: அ) காலை 8.00 - இரவு 8.00

5) விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள பறவை, விலங்கின் பெயர்களை எடுத்து எழுதுக.
விடை: மயில், கங்காரு


10. தொடர்களை வரிசைப்படுத்தி எழுதுக. 5 x 1 = 5

சரியான வரிசை:
1. குழந்தைகளுக்கு நாள்தோறும் ஒரு சத்துருண்டை கொடுக்க முடிவெடுத்தார் பெரியவர்.
2. குழந்தைகள் எண்ணிக்கைகேற்ப சத்துருண்டைகளை எடுத்து வந்தார்.
3. குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு சத்துருண்டைகளை எடுக்க ஆரம்பித்தனர்.
4. குழந்தைகளை முறைப்படுத்த முடியாமல் பெரியவர் தடுமாறினார்.
5. அன்பரசி, குழந்தைகள் அனைவரையும் வரிசையில் நிற்கச் செய்தாள்; பெரியவர் அன்பரசியைப் பாராட்டினார்.


11. படத்தைப் பார்த்து ஐந்துவரிகளில் பத்தியை உருவாக்கி எழுதுக. 5 x 1 = 5

1. காடு மழை இல்லாமல் வறண்டு இருக்கிறது.
2. காட்டில் பல விலங்குகள் உள்ளன.
3. மான் பெரியதாக இருந்தது.
4. நரியும் முயலும் நண்பர்களாக இருந்தனர்.
5. ஆந்தை மரத்தில் அமர்ந்து அவர்களைப் பார்த்தது.

12. கதையைத் தொடர்ந்து எழுதி நிறைவுசெய்க. 5 x 1 = 5

மாந்தோப்பில் இரண்டு மைனாக்கள் தங்கள் குஞ்சுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. கோடைக்காலம் வந்ததால் மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்தன. இதனால், மைனாக்கள் தங்களது குஞ்சுகளோடு வேறொரு தோப்பிற்குச் செல்ல எண்ணியது. அப்போது பக்கத்துத் தோப்பிலிருந்து பறந்து வந்த புறா, "என் மரத்திற்கு வாருங்கள் கோடைகாலம் வந்தாலும் கூட என் மரம் நிழலாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும், எத்தனை பறவைகள் வேண்டுமானாலும் தங்கலாம். ஏனென்றால் அது ஆலமரம் வாருங்கள்" என்றது. மைனாக்களும் மகிழ்ச்சியாக தங்கள் புது கூட்டிற்குச் சென்றன.