அலகு 1
இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……...
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
7. பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
II. பொருத்துக.
| 1. | சாங்போ | அ - கங்கை ஆற்றின் துணை ஆறு |
| 2. | யமுனை | ஆ - இந்தியாவின் உயர்ந்த சிகரம் |
| 3. | புதிய வண்டல் படிவுகள் | இ - பிரம்மபுத்திரா |
| 4. | காட்வின் ஆஸ்டின் (K2) | ஈ - தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி |
| 5. | சோழ மண்டலக்கடற்கரை | உ - காதர் |
விடைகுறிப்பு :
1. சாங்போ – பிரம்மபுத்திரா
2. யமுனை – கங்கை ஆற்றின் துணை ஆறு
3. புதிய வண்டல் படிவுகள் – காதர்
4. காட்வின் ஆஸ்டின் (K2) – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
5. சோழ மண்டலக்கடற்கரை – தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
III. காரணம் கூறுக.
1. இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.
இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசையினால் மடிக்கப்பட்டு உள்ளது.
2. வடஇந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.
வடஇந்திய ஆறுகள் பனிப் பிரதேசமான இமயமலைகளில் உற்பத்தியாகின்றன.
3. தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப்பாயும் நதிகள்.
தென்னிந்தியாவில் பாயும் பல ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்கு நோக்கி வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. இவை தீபகற்ப ஆறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
IV. வேறுபடுத்துக.
1. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
| இமயமலை ஆறுகள் | தீபகற்ப ஆறுகள் |
|---|---|
| இமயமலையில் உற்பத்தியாகின்றன. | மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன. |
| அகலமானது, அதிக நீளமானது. | குறுகலானது, நீளம் குறைவானது. |
| வற்றாத ஆறுகள். | வற்றும் ஆறுகள். |
2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
| மேற்குத் தொடர்ச்சி மலைகள் | கிழக்கு தொடர்ச்சி மலைகள் |
|---|---|
| தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது. | தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது. |
| மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. | கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. |
| தொடர்ச்சியான மலைகள். | தொடர்ச்சியான மலைகள் அல்ல. |
3. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
| மேற்கு கடற்கரை சமவெளிகள் | கிழக்கு கடற்கரை சமவெளிகள் |
|---|---|
| மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையில் உள்ளது. | கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் உள்ளது. |
| குஜராத் முதல் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது. | மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது. |
| வடபகுதி கொங்கணம், மத்திய பகுதி கனரா, தென்பகுதி மலபார். | வடபகுதி வடசர்கார், தென்பகுதி சோழ மண்டலம். |
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
இந்தியாவின் அண்டை நாடுகள் :
✰ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்.
✰ சீனா, நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை.
2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் :
✰ இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நேர வேறுபாட்டை தவிர்க்கிறது.
✰ இந்தியா முழுவதும் ஒரே நேரம் கடைபிடிக்க வழிவகுக்கிறது.
✰ இந்தியாவிற்கான கிரீன்விச் நேரத்தை கணக்கிடுவது எளிதாகிறது.
3. தக்காண பீடபூமி - குறிப்பு வரைக.
தக்காண பீடபூமி :
✰ தக்காண பீடபூமி முக்கோண வடிவிலானது. அதன் பரப்பளவு ஏழு லட்சம் ச.கி.மீ.
✰ மலைகள், ஆறுகள், காடு காடுகள் என மிகப்பெரிய இயற்கை அமைப்பை கொண்டுள்ளது.
4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் :
✰ நர்மதை, தபதி, மாஹி ஆகியன மேற்கு நோக்கி பாயும் ஆறுகளாகும்.
✰ நர்மதை, தபதி ஆறுகள் காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
இலட்சத்தீவுக் கூட்டங்கள் :
✰ இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது. அதன் பரப்பளவு சுமார் 32 ச.கி.மீ.
✰ இலட்சத்தீவு, மினிக்காய்தீவு, அமினித்தீவு ஆகியன சேர்ந்ததே இலட்சத் தீவுகள்.
VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
இமயமலையின் உட்பிரிவுகள் :
✰ ட்ரான்ஸ் இமயமலை ஜம்மு காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
✰ இமயமலை - இது ஒரு இளம் மடிப்புமலை. இங்கு உயரமான சிகரங்கள் உள்ளன.
✰ பூர்வாஞ்சல் குன்றுகள் - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
இமயமலையின் முக்கியத்துவம் :
✰ தென்மேற்கு பருவக் காற்றைத் தடுத்து கனமழையைக் கொடுக்கிறது.
✰ இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
✰ வற்றாத நதிகளின் பிறப்பிடமாகவும் பல்லுயிர் மண்டலமாகவும் உள்ளது.
✰ மத்திய ஆசியாவில் இருந்து வீசும் கடும் குளிர் காற்றைத் தடுக்கிறது.
✰ கோடை வாழிடங்கள், சுற்றுலா தலங்கள், புனித தலங்கள் அமைந்துள்ளன.
2. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
தீபகற்ப ஆறுகள் :
✰ தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
✰ தீபகற்ப ஆறுகள் பாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம்.
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் :
✰ மகாநதி - சத்தீஸ்கார் மாநிலத்தில் உற்பத்தியாகி ஒடிசா வழியாக பாய்கிறது.
✰ கோதாவரி - மகாராஷ்ட்ராவில் உற்பத்தியாகி ஆந்திர பிரதேசம் வழியாக பாய்கிறது. இது விருத்தகங்கா என்று அழைக்கப்படுகிறது.
✰ கிருஷ்ணா - மகாராஷ்ட்ராவில் உற்பத்தியாகி ஆந்திர பிரதேசம் வழியாக பாய்கிறது.
✰ காவேரி - கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழ்நாடு வழியாக பாய்கிறது.
✰ இது தென் இந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுகிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் :
✰ நர்மதை - மத்திய பிரதேசத்தில் உற்பத்தியாகி காம்பே வளைகுடா வழியாக பாய்கிறது.
✰ தபதி - மத்திய பிரதேசத்தில் உற்பத்தியாகி காம்பே வளைகுடா வழியாக பாய்கிறது.
3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
கங்கை ஆற்று வடிநிலம் :
✰ கங்கை ஆற்றின் தொகுப்பு சுமார் 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாய்கிறது.
✰ கங்கை ஆறு இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பை கொண்டுள்ளது.
✰ கங்கை சமவெளியில் உள்ள நகரங்களின் மக்கள் அடர்த்தி அதிகமாகும்.
✰ கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் 7010 மீ. உயரத்தில் உற்பத்தியாகிறது.
✰ கங்கோத்ரி பனியாற்றில் இருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
✰ கங்கை நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ. இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
✰ கங்கை, பிரம்மபுத்ரா சேர்ந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கின.
✰ துணை ஆறுகள் - கோமதி, காக்ரா, கோசி, யமுனை, சோன் மற்றும் சாம்பல்.
