ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - OOR PEYARKALIN MARUVU - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - OOR PEYARKALIN MARUVU

 ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக


மரூஉ

  1.  நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.

  2.  தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம்.

 இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.

  • (எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்கு வேறு; இலக்கண வழக்கு என்பது வேறு. நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது 1) இயல்பு வழக்கு, 2) தகுதி வழக்கு என இருவகைப்படும்.

  • ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இதனை 1) இலக்கணமுடையது, 2) இலக்கணப்போலி, 3) மரூஉ என மூவகையாகக் கூறுவர்.

  1.  தஞ்சாவூர், கோயமுத்தூர் இவ்வூர்களை எவ்வாறு சுருக்கி அழைக்கிறோம் ?
    = தஞ்சை, கோவை. 

  •  தஞ்சாவூர், கோயமுத்தூர் இவை தஞ்சை, கோவை எனச் சிதைந்து வந்துள்ளதால், இவற்றை மரூஉ என அழைக்கிறோம்.


1. ஆற்றூர் – ஆத்தூர்
2. சேலையூர் – சேலம்
3. கருவூர்-கரூர்
4. கொடைக்கானல் – கோடை
5. மணப்பாறை – மணவை
6. விருதுநகர் – விருதை
7. பரமக்குடி – பரம்பை
8. சங்கரன்கோவில் – சங்கை
9. அம்பாசமுத்திரம் – அம்பை
10. அறந்தாங்கி – அறந்தை
11. அலங்காநல்லூர் – அலங்கை
12. சிங்களாந்தபுரம் – சிங்கை
13. சிங்காநல்லூர் – சிங்கை
14. மயிலாடுதுறை – மயூரம்
15. சேந்தமங்கலம் – சேந்தை
16. சோழிங்கநல்லூர் – சோளிங்கர்
17. திருவண்ணாமலை – அருணை
18.கருந்தட்டைக்குடி – கரந்தை
19. கரிவலம் வந்தநல்லூர் – கருவை
20. இராமநாதபுரம் – முகவை
21. நாகர்கோவில் – நாஞ்சி
22. மயிலாடுதுறை – மாயூரம்
23. திருத்தணி – தணிகை
24. வேதாரண்யம் – வேதை
25. திருச்செந்தூர் – செந்தூர் / திருச்சீரலைவாய் / அலைவாய்
26. தர்மபுரி -தகடூர்
27. உசிலம்பட்டி – உசிலை
28. காஞ்சிபுரம் – காஞ்சி
29. பாளையங்கோட்டை – பாளை
30. ஸ்ரீவைகுண்டம் – ஸ்ரீவை
31. ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவி
32. அருப்புக்கோட்டை -அருவை
33. சிதம்பரம் – தில்லை
சேதுராயன்புத்தூர் – சேராத்து
34. திருக்குருகூர்(ஆழ்வார் 35. திருநகரி)-குருகை
36. உறையூர்-உறந்தை
37. திருவாரூர் – ஆரூர்
38. மயிலாப்பூர் – மயிலை
39. வண்ணாரப்பேட்டை – வண்ணை
40. பூவிருந்தவல்லி – பூந்தமல்லி
41. சைதாப்பேட்டை – சைதை
42. வானவன் மாதேவி – மானாம் பதி
43. மன்னார்குடி – மன்னை
44. மன்னார்குடி – மண்ணை
45. நாகப்பட்டினம் – நாகை
46. புதுக்கோட்டை – புதுகை
47. புதுக்கோட்டை – புதுமை
48. புதுச்சேரி – புதுவை
49. கும்பகோணம் – குடந்தை
50. திருச்சிராப்பள்ளி – திருச்சி
51. சோழநாடு – சோணாடு
52. நாகப்பட்டினம் – நாகை
53. உதகமண்டலம் – ஊட்டி
54. உதகமண்டலம் – உதகை
55. பைம்பொழில் – பம்புளி
56. கோவன்புத்தூர் – கோயம்புத்தூர்
57. கோயம்புத்தூர் – கோவை
58. தேவகோட்டை – தேவோட்டை
59. திருநெல்வேலி – நெல்லை
60. செங்கற்பட்டு – செங்கை
61. தஞ்சை – தஞ்சாவூர்
62. திருநின்றவூர் – தின்னனூர்