மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

 மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

valthumadal eluthuka
 மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


வாழ்த்து மடல்

                                                           தெற்குத் தெரு,

                                                              சக்கரப்பநயக்கனூர்,

                                                             02-03-2025.

அன்புள்ள நண்பா பாலாக்கு,

      நலம். நலம் அறிய ஆவல்.மாநில அளவில் நடைபெற்ற மரம் “இயற்கையின் வரம்”என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழ்களில் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.மரங்களின் பயன்களையும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக்கூறி, இருக்கிறாய்.

     நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். உயிர்வளியைக் காசுகொடுத்து வாங்கும் நிலை வராதபடி,நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்”,“மரங்களை அழிக்காதே”என்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆக்கச் செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றைச் சுவாசிப்போம்.

                                                                இப்படிக்கு

                                                               உன் தோழன்

                                                                 பாண்டி.

உறைமேல் முகவரி

பாலா,
உதப்பநாயக்கணூர்,
மதுரை.


இதையும் படிக்கவும்.