பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்- குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்- குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

 பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் - குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதைச் செயல்படுத்தத் தலைமை  ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

தலைமை ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்,

     நா. நாகபாண்டி,

     மாணவர் தலைவர்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

     சக்கரப்பநாயக்கணூர் ,

     மதுரை மாவட்டம்.


பெறுநர்,

     உயர்திரு.தலைமையாசிரியர் அவர்கள்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

      சக்கரப்பநாயக்கணூர் ,

     மதுரை மாவட்டம்.


 பெருமதிப்பிற்குரிய ஐயா,


          பொருள்:  பள்ளி தூய்மைச் செயல்திட்டம் உருவாக்கம் தொடர்பாக.


         வணக்கம்.

    பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாகச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.திட்டத்தின் செயல்பாடுகளாவன:


     அ) பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்

     ஆ) பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

     இ) பள்ளி குடிநீர்த்தொட்டியை,குளோரின் கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.

     ஈ) வகுப்பறைகள் ஆய்வகங்கள் நூலகம் ஆகியவற்றை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும்.

     உ) பள்ளிக் கட்டடங்களை பழுதுபார்த்து வெள்ளை அடிக்க வேண்டும்.

     ஊ) மாணவர்களிடையே சுத்தம்,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்துதல்.

      

    இத்திட்டங்களை மாணவர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதற்குத் தாங்களும், ஆசிரியர்களும் அனுமதி அளிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                          இப்படிக்கு,

                                                  தங்கள் உண்மையுள்ள மாணவன்,

                                                          நா. நாகபாண்டி

இடம்:  சக்கரப்பநாயக்கணூர்

நாள் : 18-04-2025


 உறைமேல் முகவரி:

     உயர்திரு.தலைமையாசிரியர் அவர்கள்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

     சக்கரப்பநாயக்கணூர் ,

     மதுரை மாவட்டம்.