( NEW ) 10th tamil annai mozhiye book back question answer 2025 - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvi mini

( NEW ) 10th tamil annai mozhiye book back question answer 2025

 பாடம் 1.1. அன்னை மொழியே

அழகார்ந்த செந்தமிழே!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! *


செப்பரிய நின்பெருமை


செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலை ப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

கனிச்சாறு
பாவலரேறு பெருஞ்சித்திரனார்

நூல்வெளி


பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.

கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன.தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகமெங்கும் பரப்பியவர். உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.



சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்

க. சச்சிதானந்தன



I. பலவுள் தெரிக

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

  1. எந் + தமிழ் + நா

  2. எந்த + தமிழ் + நா

  3. எம் + தமிழ் + நா

  4. எந்தம் + தமிழ் + நா

II. குறு வினா

Q. மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  • சீவகசிந்தாமணி

  • வளையாபதி

  • குண்டலகேசி

இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்


III. சிறு வினா

Q. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?


“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”

  • அன்னை மொழியே! அழகான செந்தமிழே!

  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!

  • குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!

  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!

  • பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!

  • கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!

  • பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”




IV. நெடு வினா

Q. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.



அறிமுக உரை:-

தாயே! தமிழே! வணக்கம்,

தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.

என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.

சுந்தரனார்

பெருஞ்சித்திரனார்

நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும்,


பாரதத்தை முகமாகவும், பிறை போன்ற நெற்றியாகவும்,


நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும்,


தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார்

குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே!


பழமைக்கு பழமையானவளே!

பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே!


பாட்டுத்தொகையே! கீழ்கணக்கே! சிலம்பே!


மேகலையே! என்று பெருங்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார்.

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்….”

“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!”

நிறைவுரை:-

இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.



கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்

  1. பெருஞ்சித்திரனார்

  2. பாரதியார்

  3. பாரதிதாசன்

  4. சுரதா

விடை : பெருஞ்சித்திரனார்

2. செந்தமிழ் பிரித்து எழுதுக.

  1. செந் + தமிழ்

  2. செம் + தமிழ்

  3. செ + தமிழ்

  4. செம்மை + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

3. அன்னை மொழியே என்ற கவிதையில் இடம் பெறும் மூவேந்தருள் ஒருவர்

  1. சேரன்

  2. சோழன்

  3. பாண்டியன்

  4. பல்வவன்

விடை : பாண்டியன்


4. பொருந்தாதவற்றைக் கண்டறிக

  1. தமிழ்ச்சிட்டு

  2. பள்ளிப்பறவைகள்

  3. எண்சுவை என்பது

  4. உலகியல் நூறு

விடை : தமிழ்ச்சிட்டு

5. செந்தமிழ் இலக்கணக்குறிப்பு வரைக

  1. பண்புத்தொகை

  2. வினைத்தொகை

  3. உம்மைத்தொகை

  4. அன்மொழித்தொகை

விடை : பண்புத்தொகை

5. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழுணவர்வை உலகெங்கும் பரப்பியவர்

  1. பாரதியார்

  2. பாரதிதாசன்

  3. சுரதா

  4. பெருஞ்சித்திரனார்

விடை : பெருஞ்சித்திரனார்



II. குறு வினா

1. பெருஞ்சித்திரனார் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?

  • தென்மொழி

  • தமிழ்ச்சிட்டு

2. பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?

  • உலகியல் நூறு

  • பாவியக்கொத்து

  • நூறாசிரியம்

  • எண்சுவை எண்பது

  • மகபுகுவஞ்சி

  • கனிச்சாறு

  • பள்ளிப்பறைவைகள்

3. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

  • எட்டுத்தொகை

  • பத்துப்பாட்டு



III. சிறு வினா

Q. “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறந்த எட்டுத்தொகை” – இச்செய்யுளில் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க் காரணத்துடன் எடுத்துக்காட்டுக

1. நற்றிணை

  • நல் + திணை

  • தொகை நூல்களுள் முதல்  நூல். நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.

2. குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை என அழைக்கப்படும்

  • குறைந்த பாடல் எல்லைகள் (4 – 8) கொண்ட நூல்

3. ஐங்குறுநூறு

  • ஐந்திணைகளை பாடும் நூல்

  • மிக குறைந்த பாடல் எல்லைகள் (3 – 6) கொண்ட நூல்

4. பதிற்றுப்பத்து

  • சேர அரசர்கள் பத்துபேரை 10 புலர்கள் பத்து பத்தாகப் பாடியது பதிற்றுபத்து

  • மிக குறைந்த பாடல் எல்லைகள் (3 – 6) கொண்ட நூல்