பாடம் 1.2. தமிழ்ச்சொல் வளம்
நூல்வெளி
மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்“ நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
எத்திசையும் புகழ் மணக்க…
கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
I. பலவுள் தெரிக
1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் ஓலையும்
சருகும் சண்டும்
விடை : சருகும் சண்டும்
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
விடை : மணி வகை
II. குறு வினா
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
III. சிறு வினா
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன்.
வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
நாற்று – நெல் நாற்று நட்டேன்
கன்று – வாழைக்கன்று நட்டேன்
பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையா உள்ளது.
IV. நெடு வினா
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
அறிமுகவுரை:-
வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மாெழியின் சொல் வளத்தைப் பற்றி காண்போம்.
சொல் வளம்:-இலக்கியச் செம்மொழிகளக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளில் காணலாம்.
ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகாராதிகளிலும் காணப்படவில்லை.
“பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல்
சொல்லாக்கத்திற்கான தேவை:-சொல்லாக்கத்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
இன்றைய அறவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களை புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.
இலக்கிய மேன்மைக்கு மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.
மொழி என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
தமிழன் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் சொல்லாக்கம் தேவை.
உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழர்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்த அறிந்து கொள்ள முடியாது.
மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
மக்களிடையே பரந்த மன்பான்மையையும், ஆளுமையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.
பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச் சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.
நிறைவுரை:-மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுடபச் சொற்களை தமிழ்ப்படுத்தி தமிழன் பெருமையை உலகிற்ககு கொண்டு செல்வோம்.
புதிய சொல்லாக்கத்தின் சேவை
இன்றைய தமிழுக்குத் தேவை
நன்றி!