நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக - 6th Tamil Term 3 Katturai - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக - 6th Tamil Term 3 Katturai

 

📑 Table of Contents

    இயல்-3 

    பதிப்பகத்தாருக்குக் கடிதம்

    நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

    அனுப்புநர்                                                                                                          

             ப.பாண்டி,

            மாணவச்செயலர்,

            6.ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

            அரசினர் மேனிலைப்பள்ளி,

            மதுரை,

            மதுரை  மாவட்டம்-625003.

    பெறுநர்

            மேலாளர்,

            நெய்தல் பதிப்பகம்,

            சென்னை-600 001.

    பெருந்தகையீர்,

            வணக்கம்.உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல் மொழியாகவும் , முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                               தங்கள் உண்மையுள்ள,

                                                                                                               ப.பாண்டி,

                                                                                                             (மாணவச் செயலர்)

    இடம்:மதுரை

    நாள்:13-03-2025

    உறைமேல்  முகவரி:

    மேலாளர்,

    நெய்தல் பதிப்பகம்,

    சென்னை-600 001